News August 14, 2024
கிராம சபை கூட்டத்தை நிறுத்த முடியுமா? (3/6)

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.
Similar News
News November 21, 2025
திண்டுக்கல் ஊர்க்காவல் படையில் சேர SUPER வாய்ப்பு!

திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல்படையில் சேர்வதற்கு திண்டுக்கல் நகர் – ஊரகம், பழனி, கொடைக்கானல் காவல் உட்கோட்ட பகுதியில் வசிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி – SSLC/ உயரம் 165 செ.மீ இருக்க வேண்டும். திண்டுக்கல் பூமார்கெட் அருகிலுள்ள ஊர்க்காவல்படை அலுவலகத்தில் வரும் 24ஆம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும். பூர்த்தி செய்து டிச.2 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். SHARE IT!
News November 21, 2025
திண்டுக்கல்: ஆதார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே https://uidai.gov.in/ என்ற இணையதளத்தில் மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
News November 21, 2025
திண்டுக்கல்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!


