News August 14, 2024
கிராம சபை கூட்டத்தை நிறுத்த முடியுமா? (3/6)

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.
Similar News
News December 15, 2025
மதுரை: 10th தகுதி.. கூட்டுறவு சங்கத்தில் வேலை ரெடி!

மதுரை மக்களே, வேளாண்மை கூட்டுறவு சங்கம் (SIMCO) சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிகளுக்கு 52 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரப்பிய 10th,12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் அடுத்த மாதம் 20ம் தேதிக்குள் இங்கு <
News December 15, 2025
மதுரை அருகே திமுக நிகழ்ச்சியில் மூக்குடைப்பு

சோழவந்தான் அருகே பொம்பன்பட்டியில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்த ‘டிபன் கேரியர்’ வழங்கும் நிகழ்ச்சியில் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு வாங்க முயற்சித்ததில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தகராறில் பொம்மன்பட்டியைச் சேர்ந்த ஸ்டீபன் 42, என்பவரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 15, 2025
மதுரையில் வங்கி தேர்வு இலவச பயிற்சி

மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் எதிரே நேஷனல் இன்ஸ்டியூட் பயிற்சி மையத்தின் 21 ஆண்டை முன்னிட்டு கல்லூரியில் இளநிலை முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் 70 மாணவர்களுக்கு இலவச வங்கி தேர்வு பயிற்சி நடைபெறவுள்ளது. இதற்கான நுழைவுத் தேர்வு டிச.21 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நேஷனல் இன்ஸ்டியூட்டில் நடைபெறும். முன்பதிவு செய்ய 95666 59104 வாட்ஸ் ஆப்பிள் முன்பதிவு செய்யலாம் முன்பதிவு செய்ய டிச.20 கடைசி நாள்.


