News August 14, 2024
கிராம சபை கூட்டத்தை நிறுத்த முடியுமா? (3/6)

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.
Similar News
News December 6, 2025
தருமபுரியில் 6,146 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், கொங்கு மஹாலில் நடைபெற்ற அரசு விழாவில் 6,146 பயனாளிகளுக்கு சுமார் ரூ.75.43 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் இன்று (டிச.06) தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி முன்னிலையில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் பயனர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
News December 6, 2025
தருமபுரியில் முதல் முறையாக செஸ் போட்டி!

தருமபுரி மாவட்டத்தில் முதல்முறையாக, இன்று (டிச.06) விவேகானந்த செஸ் அகாடமி சார்பில் சர்வதேச அளவிலான செஸ் போட்டி நடைபெறுகிறது. இதில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பின், பல்வேறு நாடுகள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள 18மாநிலங்களில் இருந்து மொத்தம் 412 பேர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
News December 6, 2025
தருமபுரி: சிசுவின் பாலினம் கண்டறிந்த வழக்கில் இருவர் கைது!

தருமபுரி, பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிசுவின் பாலினம் கண்டறிந்த, ஆந்திராவை சேர்ந்த கிளாரா மேனகாதேவி & பிரதீப் மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். மேலும், செவிலியராக பணியாற்றி வந்த பரிமளா & இடைத்தரகா் வடிவேல், தொடர்ச்சியாக இச்சம்பவத்தில் ஈடுப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அதன்பேரில், இன்று (டிச.6) ஆட்சியா் அறிவுறுதிகளின்படி இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்தனர்.


