News August 14, 2024
கிராம சபை கூட்டத்தை நிறுத்த முடியுமா? (3/6)

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.
Similar News
News November 22, 2025
கரூர் கலெக்டர் அறிவிப்பு!

கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் BLO வழங்கும் கணக்கெடுப்பு படிவத்தில் 2002 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட SIR -ல் உங்கள் விபரத்தை பார்த்து பூர்த்தி செய்ய கீழே உள்ள QR code ஜ ஸ்கேன் செய்யவும். பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிப்பும் அறிவித்துள்ளார்.
News November 22, 2025
கரூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
News November 22, 2025
வேலாயுதம்பாளையத்தில் உருட்டுக்கட்டை திருடர்கள்!

வேலாயுதம்பாளையத்தில் இரவு நேரத்தில் 4-க்கும் மேற்பட்ட நபர்கள் டவுசர், ஜட்டி மட்டும் அணிந்து, முகம் மறைத்து, கையில் உருட்டுக்கட்டை மற்றும் கத்தி வைத்துக்கொண்டு வீடுகளில் புகுந்து மிரட்டி, 4 வீடுகளில் நகை-பணம் திருடி சென்றனர். இரவில் யார் எனத் தெரியாமல் கதவு தட்டினால் திறக்க வேண்டாம் என்றும், சந்தேக நபர்கள் காணப்பட்டால் உடனே தகவல் அளிக்க வேண்டுமென்று வேலாயுதம்பாளையம் காவல்துறை தெரிவித்தனர்.


