News August 14, 2024

கிராம சபை கூட்டத்தில் நீங்களும் தலைவராக முடியுமா? (6/6)

image

கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபை கூட்டதிற்கு தலைவர். அவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார். துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் தலைவராக செயல்படலாம். இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார். அவர் தலைமையில் தான் அன்றைய கிராம சபை கூட்டம் நடைபெறும். SHARE IT

Similar News

News October 22, 2025

தேனி: நண்பரை பார்க்க சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்

image

திண்டுக்கல், நிலக்கோட்டை தாலுகா, எழுவனம்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார் 30. தேவதானப்பட்டியில் தனது நண்பரை பார்ப்பதற்கு டூவீலரில் சென்றார். அட்டணம்பட்டி பிரிவு பைபாஸ் ரோடு பால்பண்ணை அருகே திரும்பும் போது, டூவீலர் மீது கார் மோதியது.பலத்த காயமடைந்த அசோக் குமார் பெரிய குளம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

News October 22, 2025

தேனியில் பா.ஜ., பிரமுகருக்கு கொலை மிரட்டல்

image

தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி 27. பா.ஜ., மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர். அதே பகுதியில் மினரல் வாட்டர் விற்பனை கடை, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியை சேர்ந்த பிரபாகரன்.இரவில் முனியாண்டி கடை முன்பு வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரை கிழித்து, கடை பூட்டை உடைக்க முயற்சித்துள்ளார். மேலும் அலைபேசியில் முனியாண்டிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

News October 21, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 21.10.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தேனி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கலைக் கதிரவன் தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!