News August 14, 2024
கிராம சபை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவது எது?(4/6)

இதில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது, இணையவழி வரி செலுத்தும் முறை, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் முதலான 12 கூட்டப் பொருள்கள் குறித்து ஆலோசிக்கப்படும். காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் கிராம சபை கூட்டம் நடப்பதை உறுதி செய்வார்கள்.
Similar News
News November 28, 2025
சேலம்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், சேலம் மாவட்ட மக்கள் 0431-2420166 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News November 28, 2025
சேலம் அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் ரூ.5 லட்சம் திருட்டு

சேலம் அருகே கூட்டாத்துப்பட்டியில் மேஸ்திரி நாராயணசாமி குடும்பம். நேற்று உறவினர் திருமணத்திற்குச் சென்றிருந்த போது, அவர்கள் வீட்டு பூட்டு உடைத்து, பீரோவை உடைத்து ரூ.5 லட்சம் பணம், 1 1/2 பவுன் நகை மற்றும் 70 கிராம் வெள்ளிப்பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். திருடர்கள் சிசிடிவி கேமராவை சேதப்படுத்தி பதிவு கருவியையும் எடுத்துச் சென்றது காரிப்பட்டி போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
News November 28, 2025
சேலம்: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த, 18 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே<


