News August 14, 2024
கிராம சபை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவது எது?(4/6)

இதில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது, இணையவழி வரி செலுத்தும் முறை, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் முதலான 12 கூட்டப் பொருள்கள் குறித்து ஆலோசிக்கப்படும். காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் கிராம சபை கூட்டம் நடப்பதை உறுதி செய்வார்கள்.
Similar News
News November 14, 2025
திண்டுக்கல் சிறுமியை சீரழித்த இளைஞர்: அதிரடி தீர்ப்பு!

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்தாக அருள் பிரசாத் (21) என்ற இளைஞர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் இறுதிக் கட்ட விசாரணையின் முடிவில், திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் அருள் பிரசாத்திற்கு 15 ஆண்டுகள் சிறை, ரூ.5,000 அபராதம் விதித்தது.
News November 14, 2025
ஒட்டன்சத்திரத்தில் தொழிலாளி துடிதுடித்து பலி!

ஒட்டன்சத்திரம் அருகே காப்பிலியபட்டி கிராமத்தைச் சேர்ந்த 46 வயது கட்டத் தொழிலாளி பெருமாள், நேற்று ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் தனியார் கட்டடத்தில் மின்தூக்கி இயக்கி பணியாற்றும்போது 3-ஆவது மாடியிலிருந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒட்டன்சத்திரம் போலீஸ் சம்பவத்தை விசாரித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News November 14, 2025
அறிவித்தார் திண்டுக்கல் ஆட்சியர்!

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் அரசுப் பணிக்காலியிடங்களுக்கு தயாராகும் வேலைநாடுநர்களுக்கான இலவச ஒருங்கிணைந்த போட்டித்தேர்வு பயிற்சி வகுப்புகளை 14.11.2025 துவங்குகிறது. SSC, LIC, IBPS, RRB, TNPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மாதிரித் தேர்வுகளும் இலவசமாக நடத்தப்படும். ஆர்வமுள்ளோர் நேரடியாக மையத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் ஆட்சியர் தெரிவிப்பு.ஷேர் பண்ணுங்க


