News August 14, 2024

கிராம சபை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவது எது?(4/6)

image

இதில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது, இணையவழி வரி செலுத்தும் முறை, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் முதலான 12 கூட்டப் பொருள்கள் குறித்து ஆலோசிக்கப்படும். காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் கிராம சபை கூட்டம் நடப்பதை உறுதி செய்வார்கள்.

Similar News

News November 25, 2025

தென்காசியில் தொடர் மழையால் இடிந்த வீடு

image

அச்சன்புதூரில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் மணக்காட்டு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் சென்று பார்வையிட்டனர், இதுசம்பந்தமாக வீட்டின் உரிமையாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன. வீட்டின் உரிமையாளருக்கு இழப்பீடு வழங்க மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை.

News November 24, 2025

தென்காசி பஸ் விபத்து பலி எண்ணிக்கை உயர்வு!

image

தென்காசியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பலியாகி இருந்த நிலையில் தற்போது எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.3 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், சிறிய காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமாக வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

News November 24, 2025

தென்காசியில் இன்று வெளுக்க போகும் மழை!

image

தென்காசி மாவட்டத்தில் இன்று மிககனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கபட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தென்காசி மாவட்டத்திற்கு மிககனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கபட்டுள்ளது.

error: Content is protected !!