News August 14, 2024

கிராம சபை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவது எது?(4/6)

image

இதில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது, இணையவழி வரி செலுத்தும் முறை, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் முதலான 12 கூட்டப் பொருள்கள் குறித்து ஆலோசிக்கப்படும். காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் கிராம சபை கூட்டம் நடப்பதை உறுதி செய்வார்கள்.

Similar News

News December 27, 2025

விருதுநகர் அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு

image

வத்திராயிருப்பு சேனியக்குடி தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (41).இவர் செங்கல் சூளை வைத்து தொழில் செய்து வருகிறார். பாலகிருஷ்ணன் வீட்டு பீரோவில் வைத்திருந்த 10 பவுன் எடையுள்ள தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து விசாரித்த போது, கோபாலபுரத்தை சேர்ந்த சீனிவாசன் (30) என்பவர் வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது.இது குறித்து புகாரில் வத்திராயிருப்பு போலீசார் சீனிவாசனை தேடி வருகின்றனர்.

News December 27, 2025

விருதுநகர் மக்களே கலெக்டரின் மிக முக்கிய அறிவிப்பு.!

image

விருதுநகர் மாவட்டத்தில் SIR பணி நிறைவுபெற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்களார்கள் பெயர் சேர்க்கை, நீக்கம், திருத்தம், மேற்கொள்ள இன்று 27ம் தேதி, நாளை 28ம் தேதி மற்றும் ஜனவரி 3,4 தேதிகளிலும் சம்பந்தபட்ட வாக்குசாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறும். தற்போது வௌியாகியுள்ள பட்டியலில் உங்க பெயர் உள்ளதா என்று <>க்ளிக் <<>>செய்து தெரிஞ்சுகோங்க.SHARE iT

News December 27, 2025

ரேபிஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் ரேபிஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கோமதி கலந்து கொண்டு ரேபிஸ் நோயின் பாதிப்புகள் குறித்தும், ரேபிஸ் நோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினார். இதில் ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

error: Content is protected !!