News August 14, 2024

கிராம சபை கூட்டத்தின் தீர்மான நகலை பெறுவது எப்படி? (2/6)

image

7 நாட்களுக்கு முன் தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு கிராம சபை கூட்டம் குறித்து தெரிவிக்க வேண்டும். ஊராட்சி தலைவர் தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் நகலை கிராம மக்கள் கட்டணம் இல்லாமல் பெறமுடியும். உங்கள் பகுதியை தவிர்த்து மற்ற கிராம சபை கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளலாம். அதில் நீங்கள் பார்வையாளராக மட்டுமே இருக்க முடியும்.

Similar News

News December 3, 2025

திருச்சி: ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

image

திருச்சி, சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் பிலால் (46). சரக்கு ஆட்டோ டிரைவரான இவர் நேற்று இரவு காந்தி மார்க்கெட் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். தலைமை தபால் நிலையம் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு டீ குடிக்க இறங்கினார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.

News December 3, 2025

திருச்சி: தாயை வெட்டிய மகன் கைது

image

முசிறி அடுத்த அயித்தாம்பட்டியை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மனைவி பாப்பா (50). சம்பத்தன்று இவரது இளைய மகன் சுதாகர் தனது தாயிடன் சொத்து கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அதையடுத்து அவரது இடது கை கட்டை விரலை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகரை கைது செய்தனர்.

News December 2, 2025

திருச்சி: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

image

திருச்சியைச் சேர்ந்த ஐசக் நியூட்டன் என்பவர் அமேசானில் மினி புரொஜெக்டர் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு டீ-சர்ட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஐசக் நியூட்டன் திருச்சி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஐசக் நியூட்டனுக்கு ரூ.25,000, நீதிமன்ற செலவுகளுக்கு ரூ.10,000 என ரூ.35,000 அமேசான் நிறுவனம் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

error: Content is protected !!