News April 29, 2025

கிராம சபைக் கூட்டம் குறித்து அறிவித்த ஆட்சித்தலைவர்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 333 கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற மே1 தொழிலாளர் தினத்தன்று வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த  கூட்டத்தினை மேற்பார்வையிட ஊராட்சிகள் அளவில் தொகுதி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேற்படி கிராம சபா கூட்டம் சிறப்பாக நடைபெற அனைத்து தனி அலுவலர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 14, 2025

கிருஷ்ணகிரி அருகே குழந்தைகளுடன் உணவருந்திய ஆட்சியர்

image

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், பெத்ததாளப்பள்ளி ஊராட்சியில் இயங்கி வரும் ஜிப்சி குழந்தைகள் இல்லத்தில், தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி, ஆட்சியர் திரு.ச.தினேஷ் குமார் இன்று (நவ.14) குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்தினார். உடன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ர.சக்தி காவியா, வட்டாட்சியர் ரமேஷ், குழந்தைகள் இல்ல காப்பாளர் கிருஷ்டோபர் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

News November 14, 2025

இரவு ரோந்து காவலர்கள் பொதுமக்கள் தொடர்பு கொள்ளவும்

image

கிருஷ்ணகிரி நவம்பர் 14 இன்று இரவு ரோந்து காவல் பணியில் ஈடுபடும் காவலர்கள் விபரம் காவல்துறை அறிவிப்பு சமூக வலைத்தளங்கள் வெளியானது. தனிப்பட்ட மொபைல் எண் அல்லது இலவச மொபைல் எண் 100,112 என்னில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.பொதுமக்கள் குழந்தைகள் பெண்கள் இரவு நேரங்களில் தொடர்பு கொண்டு பயனடைய கிருஷ்ணகிரி காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News November 14, 2025

கிருஷ்ணகிரி : லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க!

image

கிருஷ்ணகிரி மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு&மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04343- 292275) புகாரளிக்கலாம். இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்

error: Content is protected !!