News February 13, 2025
கிராமப்புற பெண்களுக்கு ட்ரோன் பயிற்சி
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739437913185_60420136-normal-WIFI.webp)
கிராமப்புறங்களில் பயிர் சாகுபடியில் ட்ரோன் பயன்படுத்த மத்திய அரசு, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ட்ரோன் வழங்கும் திட்டத்தை அறிவித்தது, பயிற்சி அளித்தது. இத்திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டத்தில், கிளார் ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுவுக்கு பயிற்சி அளிகப்பட்டு, ட்ரோன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள், இக்குழுவை 8248716615 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 14, 2025
மகளிர் திட்டம் மூலம் இலவச பயிற்சி
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739452682996_52260892-normal-WIFI.webp)
ஏனாத்தூரில் உள்ள கால்நடை பயிற்சி மையத்தில் (FTC) வியாழன் (பிப்.13) மகளிர் திட்டம் மூலமாக சமூக வளம் காக்கும் பயிற்றுனர்களுக்கு மூலிகை சாகுபடி பற்றி டாக்டர் பிரேமா வள்ளி அவர்கள் பயிற்சி அளித்தார். துளசி செடி, ஆடாதோடா, போன்ற மூலிகை செடி வகைகளைப் பற்றியும், மூலிகைகள் பயன்படுத்தும் முறை பற்றியும் பயிற்சிகள் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பயிற்சி வெள்ளி 14 அன்றும் நடைபெறும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
News February 14, 2025
காஞ்சிபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் நியமனம்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739464094677_60443713-normal-WIFI.webp)
காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர்களை நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் நியமித்துள்ளார். அதன்படி மாவட்ட தலைவராக கே.ரஞ்சித் குமார், மாவட்ட செயலாளராக ஜ.பாஸ்கர், மாவட்ட பொருளாளராக அ.விஜய் பிரபு, மாவட்ட செய்தி தொடர்பாளர் மோ.கோபி ஆகியோரை நியமனம் செய்து பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து சிறப்பாக செயலாற்ற வாழ்த்து தெரிவித்துள்ளார்.
News February 14, 2025
காஞ்சிபுரம் எம்எல்ஏ முதலமைச்சருடன் சந்திப்பு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739450152608_51580132-normal-WIFI.webp)
சென்னை அண்ணா அறிவாலயத்தில் டெல்லியில் யுஜிசியை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்தது தொடர்பாக திமுக மாணவர் அணி செயலாளரும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி. எழிலரசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதில் மூத்த அமைச்சர்கள் உடனிருந்தனர்.