News June 27, 2024
கிராமசபைக் கூட்டம் ஆட்சியர் அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமப்புற வீடுகள் பழுது நீக்கம் செய்தல் மற்றும் கலைஞரின் கனவு இல்லம் 2024-2025 திட்டத்தை செயல்படுத்திடும் பொருட்டு, 306 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபைக் கூட்டம் ஜூலை 2 ஆம் தேதி காலை 11 மணி அளவில் நடைபெறவுள்ளது. இந்த கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு விவாதத்தில் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 6, 2025
JUST IN: திண்டுக்கல்லில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை!

திண்டுக்கல், பாறைப்பட்டி திருவள்ளுவர் நகரை சேர்ந்த தச்சுத் தொழிலாளி ராமகிருஷ்ணன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில், ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதன் மூலம் இரு சிறுவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 6, 2025
திண்டுக்கல்: FREE.. வீடு கட்டப் போறீங்களா?

திண்டுக்கல் மக்களே, வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டுக்கு வாங்கும் கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE யாக செய்ய ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க!
News November 6, 2025
திண்டுக்கல்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

திண்டுக்கல் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள், அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!


