News August 3, 2024
கிரானைட் குவாரிகளில் டி.ஐ.ஜி., கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணகிரி மற்றும் பர்கூர் ஊராட்சிகளில் இயங்கி வரும் கிரானைட் மற்றும் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்ட இடங்களை சேலம் சரக காவல் துறை தலைவர் இ.எஸ். உமா மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு , மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். மேலும், சட்ட விரோத கனிம கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் அபராதமும் விதிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.
Similar News
News November 19, 2025
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை நிலவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (நவ.19) காலை 6 மணி நிலவரப்படி 93.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதில், ஊத்தங்கரை அதிகபட்சமாக 20.4 மி.மீ மழையும், நெடுங்கல் 18.6 மி.மீ மழையும் பெய்தது. இதைத் தொடர்ந்து, போச்சம்பள்ளி 9.2 மி.மீ, பர்கூர் 8.4 மி.மீ, தேன்கனிக்கோட்டை 8 மி.மீ மழையும் பதிவானது. இந்த மழை விவசாய நிலங்களுக்கும், நீர் ஆதாரங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் எனக் கூறப்படுகிறது.
News November 19, 2025
கிருஷ்ணகிரி: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

கிருஷ்ணகிரி மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களில் உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <
News November 19, 2025
கிருஷ்ணகிரியில் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு!

கிருஷ்ணகிரிஆர்டிஓ அலுவலகம் எதிரில் மாவட்ட வேலை வாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம் நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் (நவ:21) காலை 10 மணி முதல் 3 மணி வரை நடைபெறும். படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பெண்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது.


