News October 23, 2024
கியாஸ் நுகர்வோர் கூட்டம் 28-ம் தேதி நடக்கிறது

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு (கியாஸ்) நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டமானது வருகிற 28ம் தேதி மாலை 3 மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் (அறை எண் 20ல்) நடக்கிறது. இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர் சேலம் மாவட்ட வருவாய் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 21, 2025
மடத்துக்குளம் அருகே நபர் செய்த காரியம்.. அதிர்ச்சி!

மடத்துக்குளம் சிஎஸ்ஐ சர்ச்சில் உதவியாளராக வேலை பார்த்து வருபவர் ஜார்ஜ் நெல்சன் (48). இவர் இரவு சர்ச்சுக்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு உடல் மீட்கப்பட்டு, உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து மடத்துக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News November 21, 2025
திருப்பூரில் கடன் பெற கலெக்டர் அழைப்பு!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு, கல்விக்கடன் முகாம் வருகிற 26ஆம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. pmvidyalaxmi.co.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்துடன் வங்கிக்கணக்கு, ஆண்டு வருமான சான்று, சாதிசான்று. பான்கார்டு, ஆதார் அட்டை 10, 12-ம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்துகொள்ளலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். SHARE IT
News November 21, 2025
திருப்பூர் மக்களே இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

திருப்பூர் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு.
1. <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. (வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!


