News April 18, 2025
கிணற்றில் விழுந்த நாய் உயிருடன் மீட்பு

காஞ்சிபுரம் மாவட்டம் காமராஜர் வீதி பின்புறம் உள்ள சேக்குபேட்டை பகுதியில், பயன்பாட்டில் இல்லாத 50 அடி ஆழம் கொண்ட தண்ணீர் இல்லாத பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. சுற்றுச்சுவர் இல்லாத இந்த கிணற்றில், நேற்று (ஏப்ரல் 17) மாலை அங்கு சுற்றித்திரிந்த நாய் ஒன்று தவறுதலாக விழுந்துவிட்டது. தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினர், அரை மணி நேரம் போராடி நாயை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
Similar News
News September 19, 2025
காஞ்சிபுரத்தில் இதற்கு அக்டோபர் 15ம் தேதி கடைசி!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிபொருள் விதிகள் 2008-ன் கீழ் தற்காலிகமாக பட்டாசுகள் விற்பனை செய்ய விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதன்படி, விற்பனையகம் அமைக்க விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் மூலமாக இணைய வழியில் அக்டோபர் 15-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News September 19, 2025
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன்வெளியிட வாக்காளர் பதிவு அலுவலர் முருகானந்தம் பெற்று கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ உள்ளார்.
News September 18, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (செப்.18) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.