News April 28, 2025
கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கெங்காபுரத்தை சேர்ந்தவர் மதி (17) பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் ராமச்சந்திரபுரத்திலுள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்ற மதி நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி மாயமானார். தகவலறிந்த ஆம்பூர் தீயணைப்பு வீரர்கள் மதியை சடலமாக மீட்டனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News January 9, 2026
திருப்பத்தூர்: வீட்டில் சிலிண்டர் இருக்கா? உங்களுக்கு தான்!

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.
News January 9, 2026
திருப்பத்தூர் அருகே நள்ளிரவில் பெண் தலை நசுங்கி பலி!

ஜோலார்பேட்டை அருகே கூட்ஸ் செட் ரோடு சேர்ந்தவர் சரசு, அனுமுத்து. இருவரும் திருப்பத்தூர் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்துவிட்டு நேற்று (ஜன.8) இரவு 12 மணியளவில் பணி முடித்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பால்னாங்குப்பம் அருகே பின்னால் வந்த லாரி மோதியதில் பெண் தலை நசுங்கி துடிதுடித்து உயிரிழந்தார். லாரி ஓட்டுனர் தப்பியோடிய நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 9, 2026
திருப்பத்தூரில் கோரம்; எமனாய் வந்த லாரி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அலசந்தாபுரம் கிராம பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் இன்று (08.01.2026) காலை இருசக்கர வாகனத்தில்சென்றுகொண்டிருந்தார். அப்போது ஜல்லி ஏற்றிச் சென்ற லாரி இருசக்கர வாகனத்தின் மீது, மோதியதில் சக்திவேல் கீழே விழுந்த போது, அவர் மீது லாரி ஏறியதில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


