News March 22, 2025
கிணற்றில் தவறு விழுந்த வாலிபர் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள, பாண்டியன் குப்பம் கிராம ஊராட்சி மன்ற தலைவரின் மகன், கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அறிந்த சின்னசேலம் போலீசார்,வழக்கு பதிவு செய்து.தற்போது, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News March 28, 2025
மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: கலெக்டர் உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உயர் கல்வி பயிலும் மாணவ-மாணவியர் பயன்பெறும் வகையில், புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் தொடர்பான மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து கல்லூரிகளில் முகாம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார்.
News March 28, 2025
சிறுவனை பாலியல் தொந்தரவு செய்த 17 வயது சிறுவன்

உளுந்துார்பேட்டை பகுதியை சேர்ந்த, 7 வயது சிறுவன், இரண்டாம் வகுப்பு படிக்கிறார். இவரை அதே பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுவன், பாலியல் தொந்தரவு செய்தார். இது குறித்து புகாரின் பேரில் எடைக்கல் போலீசார், 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். தொடர்ந்து அந்த சிறுவனை, விழுப்புரம் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இவர், ஏற்கனவே பைக் திருட்டில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
News March 27, 2025
கள்ளக்குறிச்சி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் விவசாயிகள் சார்ந்த விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளனர்.