News April 11, 2025
கிணற்றில் தவறி விழுந்தவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பழவேரி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் (39), குழந்தையின்மை காரணமாக மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஆழ்ந்த யோசனையில் பொதுக் கிணற்றின் சுற்றுச்சுவரில் உட்கார்ந்திருந்த போது தவறி விழுந்து, நீரில் மூழ்கி நேற்று (ஏப்.10) உயிரிழந்தார். தகவல் அறிந்த தெள்ளார் போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News July 11, 2025
தி.மலை- ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு ரயில்

தி.மலையிலிருந்து ஆந்திர மாநிலம் நரசப்பூரிற்கு நேற்று (ஜூலை 10) முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது. இது ரயில் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆந்திர பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த நிலையில், தெற்கு ரயில்வே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த ரயிலால் தி.மலை, திருப்பதி, காளஹஸ்தி செல்லும் பக்தர்கள் பயனடைவர். *திருப்பதி, காளஹஸ்தி செல்ல நினைக்கும் நண்பர்களுக்கு பகிரவும்*
News July 11, 2025
தி.மலை- ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு ரயில்

திருவண்ணாமலையிலிருந்து ஆந்திர மாநிலம் நரசப்பூரிற்கு நேற்று (ஜூலை 10) முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன. இது ரயில் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆந்திர பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த நிலையில், தெற்கு ரயில்வே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
News July 11, 2025
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்

நேற்று ஜூலை-10ந் தேதி முதல் செப்டம்பர் மாத இறுதிவரை மாற்றுத்திறனாளி கணக்கெடுப்பு பணி நடைபெறும். இல்லந்தோறும் சென்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து, அவர்களது முழுவிபரங்கள் அடங்கிய சமூக தரவு தளத்தை உருவாக்குவதற்கான பணி தொடங்கவுள்ளது. இதில் சமூக சேவை வழங்கும் நிறுவனங்கள் மூலம் (CSPs) முன்களப்பணியாளர்கள் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.