News April 11, 2025
கிணற்றில் தவறி விழுந்தவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பழவேரி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் (39), குழந்தையின்மை காரணமாக மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஆழ்ந்த யோசனையில் பொதுக் கிணற்றின் சுற்றுச்சுவரில் உட்கார்ந்திருந்த போது தவறி விழுந்து, நீரில் மூழ்கி நேற்று (ஏப்.10) உயிரிழந்தார். தகவல் அறிந்த தெள்ளார் போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 21, 2025
41-வது பாரதியார் தின குழு விளையாட்டு போட்டிகள் துவக்க விழா

திருவண்ணாமலை மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று (நவ.21) மாநில அளவிலான 41-வது பாரதியார் தின குழு விளையாட்டு போட்டிகள் துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துக்கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். மேலும், துணை சபாநாயகர் பிச்சாண்டி,கலெக்டர் தர்ப்பகராஜ் எம்பி அண்ணாதுரை, உள்ளிட்டோர் பலரும் கலந்து கொண்டனர்.
News November 21, 2025
தி.மலை: 10th தகுதி;மத்திய அரசு வேலை ரெடி!

எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <
News November 21, 2025
தி.மலை: இலவச சிலிண்டர் + அடுப்பு வேண்டுமா?

உஜ்வாலா யோஜனா மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே <


