News August 24, 2024
கிக் பாக்ஸிங் போட்டியில் தங்கம் வென்று அசத்திய சென்னை வீரர்கள்

புனேவில் நடைபெற்ற தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழ்நாடு அணி சார்பாக மாதவரம் டீச்சர்ஸ் காலனியில் உள்ள Spitfire Kickboxing Academy சார்பில் வீரர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் 7 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களை வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களை மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் நேரில் அழைத்து வாழ்த்தினார்.
Similar News
News November 15, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று (15.11.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News November 15, 2025
‘தேர்தல் ஆணைய கூட்டத்துக்கு தவெகவையும் அழைத்திடுக’

சென்னையில் தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டங்களுக்கு, தவெகவுக்கு அழைப்பு விடுக்கக் கோரி இந்திய மற்றும் தமிழக தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார். தேர்தல் செயல்முறைகள் முழுமையாக, வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றால், தவெக-வையும் அடுத்தடுத்த ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு கூட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் அழைக்க வேண்டும்’ என்றார்.
News November 15, 2025
சென்னை: ரயில்வேயில் சூப்பர் வேலை.. APPLY NOW

சென்னை மக்களே, இந்திய ரயில்வேயில் டிக்கெட் கிளர்க், ஜூனியர் கிளர்க் போன்ற 3058 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு 12th முடித்து, 18 வயதுக்கு மேல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.27ம் தேதிக்குள் இங்கே <


