News August 3, 2024
காவிரி தாய்க்கு மங்களப் பொருட்கள் வழங்கிய ரங்கநாதர்

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில் சார்பில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு இன்று நம்பெருமாள் அம்மா மண்டபத்தில் எழுந்தருளி, காவேரி தாய்க்கு பட்டுப் புடவை, மலர் மாலை, சந்தனம், குங்குமம், தாலி பொட்டு, அலங்காரம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் அடங்கிய சீர் வரிசை பொருட்களை யானை மீது அமர்ந்து ஆற்றில் வழங்கினார். இதில் திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
Similar News
News December 4, 2025
திருச்சி: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு

திருச்சி மாவட்ட காவல்துறைக்கு நடப்பு ஆண்டுக்கு (2025-26) தேவையான சாலை பாதுகாப்பு உபகரணங்கள் விநியோகிக்க தகுதி வாய்ந்த அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் இருந்து மூடி முத்திரை இடப்பட்ட விலை மதிப்பீடுகள் (டெண்டர்) வரும் 10-ம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த மேலும் விரிவான விவரங்களுக்கு மாவட்ட எஸ்பி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் தெரிவித்துள்ளார்.
News December 4, 2025
திருச்சி: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

திருச்சி மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!
News December 4, 2025
திருச்சி: விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவுரை

திருச்சி மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 50,089 ஹெக்டேர் நெற்பயிர் பயிரிடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் தற்போது டிட்வா புயலால் ஏற்பட்ட காரணமாக ஏற்பட்ட கனமழையின் காரணமாக, நீரில் மூழ்கியுள்ள பயிர்களை பாதுகாத்திட, பயிர் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த முறையில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


