News October 23, 2024
காவல் நிலையத்தில் பிளேடால் அறுத்து தற்கொலை முயற்சி

பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன். இவர், மதன் என்பவரை தாக்கியதால் விசாரணைக்காக பெரும்பாக்கம் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் தனது கழுத்தில் அறுத்துக் கொண்டார். பதறிய போலீசார் அவரை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News August 9, 2025
செங்கல்பட்டு: IT வேலை வேண்டுமா? சூப்பர் வாய்ப்பு

செங்கல்பட்டு இளைஞர்களே, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கும் விதமாக, தமிழக அரசு இலவச பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, Coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. இதற்கான வகுப்புகள் சென்னையில் நடைபெறுகிறது. இங்கே <
News August 9, 2025
செங்கல்பட்டு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை திறப்பு

செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தாம்பரம் சானடோரியம் பகுதியில் ரூ.145.41 கோடி செலவில் 400 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய மருத்துவமனையை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து, மருத்துவமனையின் உள் கட்டமைப்புகளை அவர் ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
News August 9, 2025
செங்கல்பட்டு: MRPஐ விட அதிக விலையா? இதை பண்ணுங்க

பேருந்து நிலையங்கள், சாலையோர மோட்டல்களில் உணவு பொருட்களை MRPஐ விட கூடுதல் விலை கொடுத்து வாங்கிருப்பீர்கள். அவ்வாறு விற்பது குற்றம். MRPஐ விட கூடுதல் விலைக்கு விற்பது, எக்ஸ்பயரி தேதி மாற்றி வைப்பது, வேறு ஸ்டிக்கரை அதன்மேல் ஒட்டி வைப்பது போன்றவற்றை கண்டால் FSSAIன் 9444042322 வாட்சப் எண்ணுக்கு புகார் செய்யலாம் (அ) மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் செய்யலாம். <<17350924>>தொடர்ச்சி<<>>