News April 22, 2025
காவல் சார்பு ஆய்வாளர் தேர்வு இலவச பயிற்சி

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் காவல் சார்பு ஆய்வாளர் (SI) தேர்வுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் நடத்தப்படும் கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று (ஏப்ரல் 21) தெரிவித்துள்ளார். மேலும், தகவல்களுக்கு தொலைபேசி எண்கள் 0416 2290042 மற்றும் 9499055896 வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News December 8, 2025
வேலூர்: பைக் மோதி துடிதுடித்து பலி!

வேலூர்: சேண்பாக்கத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி ஆண்டாள்(67). இவர், நேற்று(டிச.7) அப்பகுதியில் உள்ள் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற போது பைக் மோதி தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். பைக்கில் மோதிய முள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த வாலிபர், அவரது தாயார் காயமடைந்தார். மூவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News December 8, 2025
வேலூர்: தூக்கிட்டு தற்கொலை!

கே.வி.குப்பம் பகுதியை அடுத்த வேப்பங்கனேரி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமியின் மகன் குமரன்(52) சுமார் 12 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், தனது வீட்டிலேயே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கே.வி.குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜந்தா வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
News December 8, 2025
வேலூர்: காவல்துறை இரவு பணி விவரம் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (டிச-07) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க..


