News February 22, 2025
காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கவாத்து பயிற்சி

கரூர் மாவட்ட ஆயுதப்படையில், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் இன்று கவாத்து பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலந்துகொண்டு நேரில் பார்வையிட்டார். அப்போது காவலர்களின் நிறைகுறைகளை கேட்டறிந்தார்.
Similar News
News April 14, 2026
கிருஷ்ணராயபுரத்தில் ஜான்பாண்டியன் பிரச்சாரம்

கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் திவ்யாவை ஆதரித்து, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் மற்றும் கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கிருஷ்ணராயபுரம் கடைவீதி பகுதிகளில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்நிகழ்வின் போது கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
News April 14, 2026
கரூர்: குளிக்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்

கரூர் மாவட்டம், மாயனூர் கதவணையில் வீராசாமி என்பவர் துணி துவைத்து, குளிக்க சென்றபோது திடீரென புதைமணலில் சிக்கி மாயமானார். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவரை மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக கரூர் GH-க்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News April 14, 2026
கரூர்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

கரூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.13) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்ரல்.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


