News April 10, 2025
காவல் உதவி ஆய்வாளர் போட்டித் தேர்வு: ஏப். 16 இல் இலவச பயிற்சி

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் காவல் உதவி ஆய்வாளா் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஏப்.16 இல் தொடங்குகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை 04286-222260 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டோ முன் பதிவு செய்து பயன்பெறலாம்.
Similar News
News December 23, 2025
நாமக்கல்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
4. முதியோருக்கான அவசர உதவி -1253
5. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
6. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை ஷேர் பண்ணுங்க!
News December 23, 2025
இன்றைய கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (23-12-2025) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) ரூ.120-க்கும், முட்டை கோழி ரூ.95-க்கும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல் முட்டை கொள்முதல் விலை ரூ. 6.40- ஆக விற்பனையாகி வருகின்றது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி கேக் தயாரிப்பதற்கு முட்டையின் தேவை அதிகரித்துள்ளதால், விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
News December 23, 2025
நாமக்கல்: ஆண் குழந்தை வைத்திருப்போர் கவனத்திற்கு!

நாமக்கல் மக்களே..,’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT


