News March 28, 2025
காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இன்னும் சில மணி நேரத்தில் வெடிகுண்டு வெடித்து சிதறும் என கூறியதால் பாம் ஸ்குவாட் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளது. சோதனை முடிந்த பிறகே இது பொய்யான மிரட்டலா என்பது குறித்து தெரியவரும் என கூறப்பட்டுள்ளது. மேலும், அழைப்பு வந்த எண்ணை வைத்து யார் அந்த நபர் என அதிகாரிகள் துப்பு துலக்கி வருகின்றனர்.
Similar News
News December 10, 2025
ஆட்சியில் பங்கு இல்லை: தம்பிதுரை

சென்னை வானகரத்தில் இன்று (டிச.10) அதிமுகவின் செயற்குழு & பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் எம்.பி. தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆட்சியில் பங்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைப்பார். அதிமுக தலைமையிலான ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது” என்றார்.
News December 10, 2025
சென்னை: இனி புயல், மழை எதுனாலும் கவலை வேண்டாம்!

சென்னை மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு <
News December 10, 2025
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; பெண் ரவுடிக்கு சிறை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே உள்ள பிரபல பெண் ரவுடியும், பாஜக முன்னாள் நிர்வாகியுமான அஞ்சலைக்கு, வேறொரு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ரியல் எஸ்டேட் தரகரிடம் கந்துவட்டி வசூல், கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.13,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


