News August 24, 2024
காவல் அதிகாரிகளுடன் எஸ்.பி மாதாந்திர ஆய்வு

நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமையில் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள், சாராயம், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
Similar News
News December 20, 2025
நாகை: மக்ககளை சந்தித்து உரையாடிய துணை முதல்வர்

திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று நாகை மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். இந்நிலையில் இன்று காலை வேளாங்கண்ணியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியுடன் நடைப்பயிற்சி மேற்கொண்ட அவர், அங்கிருந்த மக்களை சந்தித்து நிறை குறைகளை கேட்டறிந்தார்.
News December 20, 2025
நாகை: SIR பட்டியலில் உங்க பெயர் இருக்கா?

தமிழகம் முழுவதும் SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் நாகை மாவட்டத்தில் இருந்து மட்டும் 57,338 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <
News December 20, 2025
நாகை: கீழே கிடந்த தங்க நகையை போலீசில் ஒப்படைத்த பெண்

நாகப்பட்டினம் சட்டையப்பர் மேலவீதி அருகில் கடந்த 18-ம் தேதி, ஒரு பவுன் தங்க தோடு தெருவில் கிடந்துள்ளது. அப்போது அவ்வழியாக சென்ற தபால் நிலைய ஊழியர் பவித்ரா என்பவர் அதனை கண்டெடுத்துளார். அதைத் தொடர்ந்து தங்க தோடினை நாகப்பட்டினம் டவுன் காவல்நிலையத்தில் நேர்மையுடன் பவித்திரா ஒப்படைத்தார். இதையடுத்து நகையின் உரிமையாளரை அடையாளம் கண்ட போலீசார் நேற்று அவரிடம் தங்க நகையை ஒப்படைத்தனர்.


