News March 4, 2025
காவல்துறை குறை தீர்ப்பு கூட்டம்

கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுகிறது.அந்த வகையில் நாளை (5) நடைபெற உள்ள குறை தீர் கூட்டத்தில் காவல் நிலையங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் புகார்கள் திடர்பாக மனு அளிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 5, 2025
தூத்துக்குடியில் சூப்பர் வேலைவாய்ப்பு

தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் medical officer, RMNCH counsellor என 2 காலியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. தகுதியான நபர்களுக்கு ரூ.18,000-ரூ. 60,000 வரை சம்பளம் கிடைக்கும். கூடுதல் தகவலுக்கு <
News March 5, 2025
தூத்துக்குடியில் 19 ஆயிரம் பேர் +1 தேர்வு எழுதுகின்றனர்!

தமிழகத்தில் கடந்த 3ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் தொடங்கிய நிலையில், இன்று(மார்ச் 5) பிளஸ் 1 தேர்வு துவங்கியுள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 90 மையங்களில், 19,760 மாணவர்கள் பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதுகின்றனர். தேர்வுகளை கண்காணிக்க சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.
News March 5, 2025
முதல்வர் மருந்தகம்: அமைச்சர் கீதா ஜீவன் வேண்டுகோள்

பொதுமக்கள் நலன் கருதி தமிழகம் முழுவதும் கடந்த 24ஆம் தேதி முதல்வர் மருந்தகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் 3 இடங்களில் இந்த மருந்தகம் செயல்பட்டு வருகிறது. இங்கு அனைத்து மருந்துகளும் 25% தள்ளுபடியில் கிடைப்பதுடன், ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கான மாத்திரைகள் மிகக் குறைந்த விலையில் கிடைப்பதால் பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அமைச்சர் கீதா ஜீவன் வேண்டியுள்ளார்.