News August 26, 2024

காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் கனிம வள கொள்ளை அதிகளவில் நடைபெற்று வருகிறது. அதனை தடுக்க வேண்டும், மக்களுக்கு ஆதரவாக மக்களை திரட்டி போராட்டம் நடத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோக்ராஜ் மீது பொய் வழக்கு போட்ட காவல்துறையை கண்டித்து வருகின்ற ஆக.28 அன்று சங்கரன்கோவில் தேரடி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் முத்து பாண்டியன் இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News September 15, 2025

தென்காசி மாவட்டம் இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள்

image

தென்காசி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இன்று (15.09.2025) தென்காசி மாவட்ட உட்கோட்ட பகுதியில் உள்ள ஊர்களான ஆலங்குளம் தென்காசி, புளியங்குடி சங்கரன்கோவில் போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இரவு காவல் துறை உதவி தேவைப்பட்டால் மேலே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News September 15, 2025

தென்காசி குறைதீர்க்கும் கூட்டத்தில் 530 மனுக்கள் பெறப்பட்டன

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (செப்.15) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமை வகித்தார். முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 530 மனுக்கள் பெறப்பட்டது.

News September 15, 2025

தென்காசிக்கு வருகை தரும் முதலமைச்சர்

image

சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் தென்காசி மாவட்டத்தில் நடைபெற உள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். அடுத்த வாரத்தில் எந்த தேதியில் கலந்து கொள்வார் என்பது தெரியவரும் என்றார்.

error: Content is protected !!