News March 24, 2025
காளகதீஸ்வரர் கோயில் பற்றி தெரியுமா?

மிகப்பழமையான சிவ ஸ்தலம் காளகதீஸ்வரர் கோயில் ஆகும். சேர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோயில் சோழர், பாண்டியர் விஜய நகரப் பேரரசர்கள் மதுரை நாயக்க மன்னர்கள் யாவரும் பணிந்து போற்றித் திருப்பணி செய்யப் பெற்ற பெருமையுடையது. ராகு கேது தோஸம் நீங்க, இழந்த வேலை மீண்டும் கிடைக்க, குழந்தை பாக்கியம் கிடைக்க இக்கோயில் வந்து வழிபடலாம். ஷேர் செய்யவும்.
Similar News
News December 1, 2025
திண்டுக்கல்: “7,227 வாக்காளர்கள் நீக்கம்”

ஆத்தூரில் அமைச்சர் ஐ. பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் SIR பணியில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. ஆட்சியர்,வட்டாட்சியர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும். “சின்னாளபட்டி பேரூராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்புச் சேர்க்கைப் பணியின்போது, ஏறக்குறைய 7,227 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சுமார் 26 வாக்குச்சாவடிகளில் இந்த முறைகேடு நடைபெற்றிருக்கிறது” என குற்றச்சாட்டினர்.
News December 1, 2025
பழனியில் வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

பழனி சித்தநாதன் கல்யாண மஹால் அருகே கார் கண்ணாடியை உடைத்து திருட முயன்ற 2 நபர்களை அடிவாரம் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் திருச்சி திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த நாகராஜ்;57 ராகவன் 36 என்பது தெரியவந்தது.மேலும் இவர்கள் இருவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
News December 1, 2025
திண்டுக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (நவம்பர் 30) இரவு 10 மணி முதல் இன்று (டிச. 1) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.


