News August 3, 2024
கால்நடைகளுக்கான தடுப்பூசி சிறப்பு முகாம்

தேனி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான இலம்பி தோல் நோய் (பெரியம்மை நோய்) தடுப்பூசி சிறப்பு முகாம் ஆக.5 முதல் ஆக.31 வரை நடைபெற உள்ளதாக தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். மேலும் தேனி மாவட்டம் முழுவதும் கால்நடை வளர்ப்போர் பசு மற்றும் எருமை மாடுகளை அழைத்து வந்து தடுப்பூசி போட்டு பயன் பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 4, 2025
தேனி: மாட்டுவண்டி மீது கார் மோதி விபத்து

கம்பம் பகுதியை சேர்ந்த மாரிசாமி (42) நேற்று முன்தினம் (நவ.2) கம்பம் பைபாஸ் சாலையில் இரட்டை மாட்டுவண்டியில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக ராஜன் என்பவர் ஓட்டி வந்த கார், இவரது மாட்டு வண்டி மீது மோதியது. இந்த விபத்தில் மாரிச்சாமி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் மாடுகளும் காயமடைந்த நிலையில் கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News November 4, 2025
தேனியில் மின்தடை பகுதிகள் அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் தேனி, காமாட்சிபுரம்,மார்க்கையன்கோட்டை , வீரபாண்டி, தேவாரம், கடமலைக்குண்டு ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை(நவ.5) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மேற்கண்ட துணைமின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெரும் பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News November 4, 2025
தேனி: வாக்காளர் திருத்த முகாம் ஆட்சியர் அறிவிப்பு

வாக்காளர் திருத்த பட்டியல் சிறப்பு தீவிர முகாம் நாளை 4.11.2025 முதல் 04.12.2025 வரை வீடுவீடாக சென்று கணக்கு எடுக்கும் பணிகள் நடைபெற உள்ளது என, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ரஞ்ஜீத் சிங் இன்று தெரிவித்துள்ளார். மேலும் உதவிக்கு 1950 என்ற எண்ணில் பொதுமக்கள் அழைக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


