News February 16, 2025
காலை இழந்த நடிகர் சிரிக்கோ உதயா

நடிகர் சந்தானத்திற்கு நகைச்சுவை வசனங்கள் எழுதிய நகைச்சுவை நடிகர் ‘சிரிக்கோ உதயா’ நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சை மூலம் அவரது வலது கால் அகற்றப்பட்டது. திரைத்துறையில் கடந்த 35 ஆண்டுகளாக இருக்கும் இவர், சிறந்த வயலின் இசைக்கலைஞர், மிமிக்ரி செய்வதில் வல்லவர் என பன்முகத் திறமை கொண்டவர் ஆவார்.
Similar News
News July 8, 2025
உள்ளூரில் வங்கி அதிகாரி வேலை

பேங்க் ஆப் பரோடா வங்கியில் ‘லோக்கல் பேங்க் ஆபிசர்’ எனப்படும் உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2,500 பணியிடங்கள் நிரப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 60 பணியிடங்கள் உள்ளன. ரூ.48,480 – 85,920 வரை . சம்பளம் வழங்கப்படும். தமிழ் தெரிந்திருக்க வேண்டும். டிகிரி இருந்தால் போதும் ஜூலை 24ஆம் தேதிக்குள் இந்த <
News July 8, 2025
பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த பிரபல ரவுடியான தினேஷ்குமார், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், கொலை, செம்மர கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட 33 வழக்குகளில் தொடர்புடையவர். மேலும், ஆந்திரா, கர்நாடக போன்ற அண்டை மாநிலங்களிலும் இவர் மீது நிறைய வழக்குகள் உள்ளன. அவர் இருக்கும் இடத்தை அறிந்த போலீசார், அவரை சுற்றி வளைத்து கையும் களவுமாக கைது செய்தனர்.
News July 8, 2025
சென்னையில் இன்று மின்தடை அறிவிப்பு 2/2

சென்னையில் இன்று (ஜூலை 8) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, போரூர், காரம்பாக்கம், ஐயப்பன்தாங்கல், திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ், நடேசன் ரோடு, நடுக்குப்பம், மையிலாப்பூர், ஆர்.கே.சாலை, சிட்லப்பாக்கம், சேலையூர், மாடம்பாக்கம், அடையாறு, சாஸ்திரி நகர், டீச்சர்ஸ் காலனி, செம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்கள்