News January 12, 2025
காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பாதுகாப்பு அலுவலர் 1 பணியிடமும்(மாத ஊதியம் ரூ.27,804), சிறப்பு சிறார் காவல் பிரிவில் சமூகப்பணியாளர்கள் 2 பணியிடங்களும்(மாத ஊதியம் ரூ.18536) ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் www.virudhunagar.nic.in லிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஜன.27 க்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.
Similar News
News December 18, 2025
விருதுநகர் அருகே கண்மாயில் கிடந்த ஆண் சடலம்

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி மாங்குளம் கண்மாயில் இன்று டிசம்பர் 18 அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் விரைந்து சென்று அந்த சடலத்தை மீட்டு விசாரித்ததில் அவர் பாளையம்பட்டியை சேர்ந்த தெய்வேந்திரன்(54) என தெரிய வந்தது. அவர் தவறி விழுந்து இறந்தாரா வேறு ஏதேனும் காரணமா என வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 18, 2025
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி சட்ட வாரம்

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் டிசம்பர் 17 முதல் டிசம்பர் 26 வரை ஆட்சி மொழி சட்டவாரம் கொண்டாடப்பட உள்ளது. ஆட்சி மொழி சட்டம் வரலாறு பிழையின்றி தமிழில் குறிப்புகள் வரைமுறைகள் எழுதுவதற்கு பயிற்சி அளிக்கப்படும் மாணவர்களுக்கு பட்டிமன்றம் ஒன்றியம் வட்ட அளவில் பணியாளர்கள் பொதுமக்கள் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுடன் ஆட்சி மொழி சட்டம் குறித்து விளக்கக் கூடம் நடைபெறும் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்
News December 18, 2025
விருதுநகர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

விருதுநகர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


