News June 28, 2024
காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளில் கீழ்க்கண்ட விவரப்படி ஆசிரியர்கள் பணியிடம் காலியாகவுள்ளது. இதில் 6 பட்டதாரி ஆசிரியர் (தமிழ், ஆங்கிலம், கணிதவியல், வேதியியல், தாவரவியல், வணிகவியல்) பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் இதுகுறித்த விபரங்களுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News November 19, 2025
காஞ்சி: மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி!

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி டிசம்பர் 01ஆம் தேதி அன்றும், தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி டிசம்பர் 4ஆம் தேதியன்றும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கென தனித்தனியே பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளது. காஞ்சிபுரம், பி.டி.வி.எஸ் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ள இந்த போட்டியில், மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 19, 2025
காஞ்சியில் மின்தடை அறிவிப்பு!

தாமல் & முசரவாக்கம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை (நவ.20) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் பாலுசெட்டிசத்திரம், தாமல், வதியூர், ஒழுக்கோல்பட்டு, கிளார், களத்தூர், அவளூர், பெரும்புலிபாக்கம், பொய்மைநல்லூர், ஜாகீர் தண்டலம், பனப்பாக்கம், முசாவாக்கம், முத்துவேடு, பெரும்பாக்கம், திருப்புட்குழி ஆகிய பகுதியில் காலை 9 மணி-மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
News November 19, 2025
காஞ்சி: இன்று இதை செய்தால் பணம் கொட்டும்!

கார்த்திகை பௌர்ணமிக்கு எவ்வளவு சக்தி உள்ளதோ, அதே அளவு சக்தி கார்த்திகை மாத அமாவாசைக்கும் உள்ளது. இம்மாதத்தில் வரும் அமாவாசையை ‘மிருகசீரிஷ அமாவாசை’ என்பர். இம்மாத அமாவாசை இன்று காலை முதல் நாளை நண்பகல் 12.31 வரை உள்ளது. இந்த நாளில், மாலை நேரத்தில் உங்கள் வீடுகளில் அகல் விளக்கேற்றுவதன் மூலம் லட்சுமி தேவியின் அருளை பெற முடியும். இதனால் உங்கள் வீட்டில் செல்வம் கொழிக்கும். ஷேர் பண்ணுங்க!


