News November 15, 2024
காலணி தொழிற்சாலை அமைக்க அடிக்கல் நாட்டிய முதல்வர்
அரியலூர் மகிழைபுரத்தில் 130 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டையில், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் காலணி தொழிற்சாலை அமைப்பதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி வைத்து பணிகளைத் தொடங்கி வைத்தார். மேலும் இந்த காலணி தொழிற்சாலை மூலம் 15 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.
Similar News
News November 19, 2024
மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் கைது
அரியலூர் அருகே தனியார் பள்ளியில் படிக்கும் மாணவியிடம் அங்கு பணியாற்றும் ராஜீவ்காந்தி என்ற இயற்பியல் ஆசிரியர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் ராஜீவ் காந்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 19, 2024
சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணி
அரியலூர் சமூக நலத்துறையின் கீழ் சகி ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகின்றது. இதில் மைய நிர்வாகி, வழக்குப் பணியாளர் உள்ளிட்ட பணியிடத்திற்கு ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே இப்பணியிடத்திற்கு வருகிற டிச-03 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்க மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
News November 18, 2024
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
தமிழ்நாடு முதலமைச்சரால் உங்களை தேடி, உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு தாலுகாவினை தேர்வு செய்து, அரசின் நலத்திட்டங்கள், சேவைகள் தங்கு தடையின்றி மக்களை சென்று அடைவதை உறுதி செய்யும் வகையில் ஆய்வு செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நவ 20 மற்றும் 21 ஆம் தேதியில் அரியலூர் வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்ள அறிவிப்பு.