News April 12, 2025
கார் மோதிய விபத்தில் விவசாயி பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த வாழவந்தான் குப்பத்தை சேர்ந்தவர் சீதாராமன், விவசாயி. இவர் கடந்த, 10ஆம் தேதி இரவு தனது பைக்கில், வாழவந்தான்குப்பத்தில் இருந்து தியாகதுருகம் நோக்கி சென்றார். அப்போது அவருக்கு பின்னால் வந்த கார், திடீரென பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சீதாராமன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில், தியாகதுருகம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News September 18, 2025
கள்ளக்குறிச்சி: பட்டதாரிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம்!

கள்ளக்குறிச்சி பட்டதாரிகளே..தொழில் முனைய விரும்புவரா நீங்கள்..? உங்கள் சொந்த ஊரில் உழவர் நல மையம் அமைக்க ரூ.6 லட்சம் மானியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மேலும், இந்தத் துறையில் இலவச சிறப்பு பயிற்சி பெற மாவட்ட வேளாண் பயிற்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <
News September 18, 2025
கள்ளக்குறிச்சி: வரப் போகுது மழை காலம்! இதை தெரிஞ்சுக்கோங்க

கள்ளக்குறிச்சி மக்களே! மழை காலம் தொடங்க இருப்பதால், மின்சார சேவை அடிக்கடி பாதிக்கப்படும். அப்போது பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். ஷேர் பண்ணுங்க!
News September 18, 2025
கள்ளக்குறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

இன்று (செப்.18) முகாம் நடைபெறும் இடங்கள்
1.கள்ளக்குறிச்சி – ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில், கரடிசித்தூர்
2.உளுந்தூர்பேட்டை – அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி
3.சின்னசேலம் – ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, காளசமுத்திரம்
4.தியாகதுருகம் – ஆதி திராவிடர் நலப்பள்ளி அருகில், குடியநல்லூர்
5.சங்கராபுரம் – புதிய ஊராட்சி மன்ற அலுவலகம், பிரம்மகுண்டம்
6.திருக்கோவிலூர் – அரசு உயர் நிலைப் பள்ளி, கீழதாழனுர் (SHARE IT)