News February 15, 2025

கார் டயர் வெடித்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு

image

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் சுரேந்தர் என்பவர் ஓட்டிச் சென்ற காரின் டயர் வெடித்தது. இதில் அடுத்தடுத்து இரண்டு இருசக்கர வாகனங்களின் மீது கார் மோதிய விபத்தில், திருச்சியைச் சேர்ந்த பெரியசாமி(60) என்ற பூ வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பள்ளபட்டியைச் சேர்ந்த அஜய், அருண், மகேந்திரன் ஆகிய 3 பேர் காயமடைந்தனர். 

Similar News

News July 8, 2025

அவசர கடனுதவிக்கு இங்கே செல்லலாம்..!

image

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் மூலம் அவசர மருத்துவத் தேவை, கல்வித் தேவை, திருமணம் போன்ற எவ்வித அவசரத் தேவைகளுக்கும் கடனுதவி பெற முடியும். மாதச் சம்பளம் வாங்கும் எவரும் ரூ.7 லட்சம் வரை கடன் பெற முடியும். மேலும், நிலையான தொழில் முனைவோரும் இதற்கு விண்ணப்பித்து கடன் பெற முடியும். இதற்கான வட்டி விகிதம் 11% <<16987831>>*விண்ணப்பிப்பது எப்படி* <<>> இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News July 8, 2025

கூட்டுறவு வங்கியில் அவசரக் கடன் பெறுவது எப்படி?

image

▶️ இதற்கு உங்களது CIBIL 720ஆக இருக்க வேண்டும்.
▶️<> TNSC <<>>பக்கத்தில் உள்ள லோன் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
▶️ அந்த விண்ணப்ப படிவத்துடன் உரிய ஆவணங்களான ஆதார், பான், வருமான சான்றிதழ், பணி சான்றிதழ் ஆகியவற்றௌடன் இணைத்து அருகே உள்ள கூட்டுறவு வங்கியை அணுகி தெரிந்துகொள்ளலாம்.
அங்கு உங்களின் தகுதி சரிபார்க்கப்பட்டு உங்களின் சம்பள வங்கிக் கணக்கிற்கே லோன் தொகை வழங்கப்படும். SHARE IT

News July 8, 2025

திண்டுக்கல்லில் 4 வயது குழந்தை பரிதாப பலி

image

திண்டுக்கல்: ஏ.வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சகாயராணி(32). இவரது கணவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இவர்களுக்கு ஜெரோன்(10), செபஸ்டின் அபர்னா(4) என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், தோமையார்புரம் அருகே ஓர் உறவினர் வீட்டிற்கு குழந்தைகளுடன் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்த போது ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில், சிறுமி செபஸ்டின் அபர்னா பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!