News February 15, 2025
கார் டயர் வெடித்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் சுரேந்தர் என்பவர் ஓட்டிச் சென்ற காரின் டயர் வெடித்தது. இதில் அடுத்தடுத்து இரண்டு இருசக்கர வாகனங்களின் மீது கார் மோதிய விபத்தில், திருச்சியைச் சேர்ந்த பெரியசாமி(60) என்ற பூ வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பள்ளபட்டியைச் சேர்ந்த அஜய், அருண், மகேந்திரன் ஆகிய 3 பேர் காயமடைந்தனர்.
Similar News
News November 15, 2025
திண்டுக்கல்லில் மின்தடை அறிவிப்பு

திண்டுக்கல்லில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் (நவ.18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, திண்டுக்கல் மாநகர் முழுவதும், செட்டிநாயக்கன்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி, என்.எஸ்.நகர், குரும்பபட்டி, பொன்மாந்துறை மற்றும் அதனை சுற்றுயுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இதற்கு ஏற்றார்போல் வேலைகளை திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
News November 15, 2025
கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி

திண்டுக்கல் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். கூலிவேலை பார்த்து வந்த இவர், சொந்தமாக ஆடுகள் வைத்து வளர்த்து வந்தார். தனது ஆட்டிற்கு தீவனத்தை பறிப்பதற்காக ஊரின் அருகே உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் செடிகளை அறுத்துக் கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு இருந்த கிணற்றில் தவறி விழுந்தார். இதில் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 15, 2025
திண்டுக்கல் காவல்துறை சார்பில் அறிவுரை!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை “சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்க வேண்டாம்” என பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதால் எதிர்பாராத விதமாக விபத்துகள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு, சிறுவர்களிடம் வாகனங்களை கொடுக்க வேண்டாம் எனவும் விழிப்புணர்வு பதிவை வெளியிட்டுள்ளனர்.


