News April 2, 2025

கார்கள் நேருக்கு நேர் மோதல் – குழந்தைகள் உட்பட 5 பேர் காயம்

image

வாணரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜகுருநாதன் இவர் நேற்று வேகனார் காரில், கடலுாரில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தார். நோனாங்குப்பம் சுண்ணாம்பாறு பாலத்தில் கார் சென்ற போது, புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி சென்ற டவேரா கார் அதிவேகமாக வந்த நிலையில், முன்னாள் சென்ற பைக்கின் மீதும், எதிரே வந்த வேகனார் கார் மீதும் நேருக்கு நேர் மோதியது. இதில் குழந்தைகள் உட்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

Similar News

News July 9, 2025

புதுவை: ஐ.டி.ஐ-யில் சேர்வதற்கான அறிவிப்பு

image

புதுவையில் 10ம் வகுப்பு தவறிய மாணவர்களுக்கான தொழிற் பிரிவுகளான, வெல்டர், ஒயர்மேன் உள்ளிட்ட பயிற்சி பிரிவுகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு, மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள், தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் 14ம் தேதி நடக்கிறது. இதனை அடுத்து, மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடக்கிறது. மேலும் 9443958173, 9843856898 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. SHARE IT!

News July 9, 2025

மீனவர்களுக்கு மானியத்தில் படகு-கால அவகாசம் வழங்கல்

image

புதுச்சேரி பகுதியைச் சார்ந்த மீனவர்களுக்கு கண்ணாடி நுண்ணிழை கட்டுமரம், இயந்திரமில்லா கண்ணாடி நுண்ணிழை கட்டுமரம் 50 சதவீதம் மானிய விலையில் வழங்கும் திட்டத்தின் கீழ், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கடந்த 5ம் தேதி வரை பெறப்பட்ட நிலையில், மீனவர்களின் வேண்டுகோளுக்கிணங்க விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வரும் 25ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மீனவர் நலத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

News July 9, 2025

பாகூரில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

image

புதுச்சேரி, பாகூர் பகுதியில் அருள்மிகு வேதாம்பிகை சமேத மூலநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. நாளை (ஜூலை 9) இந்த கோவிலில் தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நாளை பாகூர் பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு புதுச்சேரி கல்வித்துறையின் இணை இயக்குநர் சிவகாமி விடுமுறை அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!