News April 7, 2025
காரை: கப்பல் துறைமுகத்தில் தேசிய கடல்சார் தினம்

காரைக்கால் தனியார் கப்பல் துறைமுகத்தில் தேசிய கடல்சார் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. கலெக்டர் சோம சேகர் அப்பாராவ் தலைமை தாங்கினார். துறைமுகத்தின் தலைமை இயக்க அதிகாரி சச்சின் ஸ்ரீவஸ்தவா முன்னிலை வகித்தார். இதில், கடல்சார் துறையின் முக்கிய அம்சங்களை வலியுறுத்தி, துறைமுகத்தின் தலைமை இயக்க அதிகாரி தலைமை நிர்வாக அதிகாரிகளின் உரைகள் மற்றும் விளக்கக்காட்சிகள் இடம்பெற்றன.
Similar News
News December 22, 2025
புதுச்சேரி: மண்டல ரயில்வே ஆலோசனை கூட்டம்

தெற்கு ரயில்வே சார்பில், சென்னை நகரில் நடைபெற்ற மண்டல ரயில்வே பயனாளர்கள் ஆலோசனைக் குழு (ZRUCC) 129-வது கூட்டத்தில், புதுச்சேரி அரசின் பொதுக் கணக்கு குழு (Public Accounts Committee) தலைவர் மற்றும் கதிர்காமம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் KSP. ரமேஷ் கலந்து கொண்டார். கூட்டத்தில் ரயில்வே சேவைகள் மேம்பாடு பயணிகளின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
News December 22, 2025
புதுச்சேரி: ரூ.6.15 கோடி மதிப்பில் பணிகள்

புதுச்சேரி, வில்லியனூர் தொகுதியில் ரூ.6.15 கோடி மதிப்பிலான ‘யு’ வாய்க்கால் மற்றும் இணைப்புச் சாலை பணிகளை, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா இன்று தொடங்கி பூமி பூஜை செய்து வைத்தார். பொதுப்பணித்துறை மூலம் நடைபெறும் இப்பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி, அரும்பார்த்தபுரம் மேம்பாலம் அருகே நடைபெற்றது.
News December 22, 2025
புதுச்சேரி AISF மாநில விரிவடைந்த குழுக்கூட்டம்

புதுச்சேரி, அனைத்திந்திய மாணவர் பேரவை (AISF) மாநில விரிவடைந்த குழுக்கூட்டம், மாநிலத் தலைவர் வி.உதயராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகள் மூடப்பட்டதையும், மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் சில பேராசிரியர்கள் RSS மற்றும் ABVP போன்ற அமைப்புகளில் பங்கேற்பதையும் கண்டித்து போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.


