News April 10, 2025
காரைக்குடி 1000 ஜன்னல் வீடு பற்றி தெரியுமா?

காரைக்குடியில் உள்ள ஆயிரம் ஜன்னல் வீடு மிகவும் பிரபலமாகும். 1941ஆம் ஆண்டு 20,000 சதுர அடி பரப்பில் கட்டப்பட்ட இந்த மாளிகை அந்த காலத்திலேயே சுமார் ரூ.1.25 லட்சம் செலவில் கட்டப்பட்டது. இந்த வீட்டில் 25 பெரிய அறைகள் மற்றும் ஐந்து பெரிய ஹால்கள் உள்ளன. மேலும் வீட்டில் சுமார் 20 கதவுகள் மற்றும் 1000 ஜன்னல்கள் உள்ளன. இதன் பாரம்பரியம் மாறாமல் தற்போது வரை இந்த வீடு பாதுகாக்கப்பட்டு வருகிறது. Share It.
Similar News
News December 3, 2025
அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டம், தமிழக முதலமைச்சரால் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த மகளிருக்கு, அவ்வையார் விருது வழங்கப்படவுள்ளது. தகுதிகளுடைய சமூக சேவை புரிந்த பெண்கள் வருகின்ற 31.12.2025 ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.
News December 3, 2025
சிவகங்கை: SBI வங்கியில் வேலை ரெடி., தேர்வு இல்லை..!

சிவகங்கை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு <
News December 3, 2025
திறன் மேம்பாட்டு பயிற்சி ஆட்சியர் அறிவிப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்காக திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சிகள் தாட்கோ சார்பில் நடைபெறும் விண்ணப்பிக்க www.tahdco.com இணையதளத்தில் ஆன்லைனில் பதிவு செய்யலாம். 18–23 வயது, +12 / பட்டப் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி கலாம் 6 மாதம் பயிற்சி கட்டணம் + விடுதி வசதி தாட்கோ வழங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


