News March 25, 2025

காரைக்குடி: போக்குவரத்துக் கழகத்தில் வேலை

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, காரைக்குடி கோட்டத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிக்கு 185 இடங்கள் நிரப்பப்படவுள்ளன. தகுதியானவர்கள் மார்ச்.21 முதல் ஏப்ரல்.21 வரை விண்ணப்பிக்கலாம். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து உங்க நண்பர்களுக்கு Share செய்யுங்கள். 

Similar News

News April 7, 2025

உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் தேதி அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம் காளையார்கோவில் வட்டம் பரமக்குடி மெயின் ரோடு வெள்ளையம்பட்டி பாஸ்டின் நகரில் அமைந்துள்ள A.S.கார்டன் மஹாலில் வரும் 16ஆம் தேதி பிற்பகல் 04 மணி முதல் 06 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News April 7, 2025

அங்கன்வாடி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில், காலியாகவுள்ள 2 முதன்மை அங்கன்வாடி பணியாளர், 2 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 29 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்து, காலிப்பணியிட குழந்தை மையம் அமைந்துள்ள வட்டாரம் / திட்டம், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் வரும் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 7, 2025

சிவகங்கை: ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளர் ( SUPERVISOR ) காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூபாய் 15,000 வரை வழங்கப்படுகிறது. 12-ஆம் வகுப்பு வரை படித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக்<<>> செய்யவும். *வேலை தேடும் நண்பர்கள், உறவினர்களுக்கு இதை ஷேர் செய்யவும்*

error: Content is protected !!