News December 6, 2024

காரைக்கால் தனித்தேர்வர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

image

ஏப்ரல் 2025 பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தனித் தேர்வர்கள் 06.12.2024 முதல் 17.12.2024 வரை காரைக்கால் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேரில் சென்று இணையதளம் மூலம் விண்ணத்தை விண்ணப்பத்தை செய்து கொள்ளலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம் மாவட்ட அறியலாம்

Similar News

News November 12, 2025

புதுவை: மாணவர்களுக்கு நிதி உதவி அரசாணை வெளியீடு

image

புதுச்சேரி, முதலமைச்சர் ரங்கசாமி ஆட்சியில், பெருந்தலைவர் காமராஜர் நிதியுதவித் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு சுமார் ₹ 27.84 கோடி நிதியுதவி வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 10% அரசு இட ஒதுக்கீட்டில் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கும், இந்த நிதியுதவி விரைவில் வழங்கப்பட இருக்கிறது.

News November 12, 2025

புதுச்சேரி: முதலாம் உலகப் போரின் நினைவு தினம்!

image

முதலாம் உலக போரின் 109ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி இன்று (12.11.2025) காரைக்காலில் ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள நினைவு தூண் முன்பு அனுசரிக்கப்பட்டது. இந்தியாவிற்கான பிரான்ஸ் நாட்டுத் தூதர் தியரி மாத்தூ, புதுவைக்கான துணை தூதர் எட்டியென் ரோலண்ட் பியக், மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில் தூதரக அதிகாரிகள், பிரஞ்சு குடியிரிமை மக்கள் கலந்து கொண்டனர்.

News November 12, 2025

புதுச்சேரி: கவர்னர் முன்னிலையில் ஒப்பந்தம்

image

புதுச்சேரி அரசு, சுற்றுலாத்துறை மற்றும் பிரான்ஸ் நாட்டில் உள்ள சென்ட்ரல் வால் தி லோயர் மாகாணம் இடையில் கலாச்சாரப் பரிமாற்றம், கல்வி மற்றும் ஆராய்ச்சி, வேளாண்மை மற்றும் உணவுத்துறை மேலாண்மை, இந்தோ-பிரெஞ்சு கூட்டுறவு, உணவு மற்றும் பாரம்பரியம் சார்ந்த திருவிழா கொண்டாட்டங்கள் ஆகியவற்றுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆளுநர் மாளிகையில், நேற்று (நவ.11) துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் முன்னிலையில் நடைபெற்றது.

error: Content is protected !!