News August 24, 2024
காரைக்கால் கல்லூரியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு

காரைக்கால் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இந்த கல்வி ஆண்டுக்கான (2024 – 2025) முதுகலை முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளின் சேர்க்கை வருகிற 28.08.24 காலை 10.00 மணி முதல் கல்லூரியில் முதலாவது தளத்தில் உள்ள கருத்தரங்க வளாகத்தில் நடைபெற உள்ளன. மேலும் இதற்கான முழுவிவரம் கல்லூரி இணையதளத்தில் www.kmkpgskkl.in பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 22, 2025
புதுவை: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

புதுவை, ரெட்டியார்பாளையம் சேர்ந்த தம்பதியினர் ததேயூ ராஜ் – உஷா. இவர்களது மூத்த மகள் லியோனாமரி தெரேஸ் என்பவர் சில ஆண்டுகளாக ரத்த சோகையால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்றார். மேலும் அவர் உணவு சாப்பிட முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் மன உளைச்சலால் லியோனாமரி தெரேஸ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ரெட்டியார் பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 22, 2025
தள்ளுவண்டி உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

காரைக்கால் நகராட்சியின் PM SVANidhi திட்டத்தின் கீழ் பாரதியார் வீதி எல்லை முதல் கீழகாசாகுடி எல்லை முடிவு வரை சாலையோரத்தில் தள்ளுவண்டி கடைகள் வைத்திருப்போர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாதவாறு கடைகளை நடத்த வேண்டுமென காரைக்கால் நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வியாபார நேரம் முடிந்தவுடன் தங்களது தள்ளுவண்டிகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
News November 22, 2025
புதுச்சேரி: குறை தீர்வு நாள் முகாம் அறிவிப்பு

புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில், (நவ.22) பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறும் என புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளைப் புகார் மூலம் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


