News February 17, 2025
காரைக்கால் ஆட்சியர் அலுவலகத்தில் நாளை குறைதீர்ப்பு முகாம்

புதுச்சேரி ஆளுநர் அறிவுறுத்தலின்படி பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் காரைக்கால் மாவட்டத்தில் நாளை 17/02/2025 (திங்கட்கிழமை) மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆட்சியர் வளாகத்தில் காலை 09.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைதீர்ப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News December 2, 2025
புதுச்சேரி: மழையால் இடிந்து விழுந்த பள்ளி சுவர்

புதுச்சேரி அரியாங்குப்பம் புறவழிச்சாலை, சிக்னல் அருகில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. டிட்வா புயலால் பெய்த மழையால், நேற்று சிறுவர் சீர்திருத்தப்பள்ளியின், 10 அடி உயர மதில் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
அப்போது, சுவர் பக்க த்தில் இருந்த, ஜூஸ், டிபன், சிக்கன் கடைகள் உட்பட 5 சாலையோர கடைகள் மீது சுவர் விழுந்ததில் கடைகள் முற்றிலும் சேதமடைந்தன.
News December 2, 2025
புதுச்சேரி: ஆசிரியர் பணிக்கான முக்கிய அறிவிப்பு

புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையில் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தேச பட்டியல், வயது உச்சவரம்பு, கல்வித்தகுதி, பதவி உயர்வு உள்பட நியமன விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளன. இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் https://schooledn.py.gov.in வெளியிடப்பட்டுள்ளது.
News December 2, 2025
புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி முக்கிய அறிவிப்பு

புதுச்சேரி அரசின் பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை, பேரிடர் மேலாண்மை துறை சார்பில், 360 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி இன்னும் 2 மாதத்தில் 1000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். இதற்கான அறிவிப்பு, தேதி விவரத்துடன் வெளியிடப்பட்டு வருகிறது. அரசு மருத்துவ கல்லுாரி செவிலியர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும் என தெரிவித்தார்.


