News November 24, 2024
காரைக்கால் அருகே 9 பேர் கைது

காரைக்கால் நாகப்பட்டினம் சாலையில், நிரவி அருகே உள்ள தனியார் ரெஸ்டோ பார் ஓட்டல் அறையில் இருந்து திடீரென புகை அதிக அளவில் வெளியேறியது. தீ விபத்து ஏற்பட்டு விட்டதாக சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஓட்டல் அறையில் இருந்து வெளியேறி புகையை கண்ட போலீசார், அறையில் 2 நாட்களாக கஞ்சா அடித்து மயங்கி கிடந்த 8 வாலிபர்கள், ஓட்டல் மேலாளர் உட்பட 9 பேரை நேற்று கைது செய்தனர்.
Similar News
News December 7, 2025
புதுச்சேரி முதல்வர் வேண்டுகோள்

இந்திய முப்படை முன்னாள், இந்நாள் மற்றும் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தாரின் தியாகத்தை நினைவு கூர்ந்து நன்றி தெரிவிக்கும் வகையில் டிச.7-ஆம் தேதி கொடிநாளாக கொண்டாடப்படுகிறது. இதில் அவர்களின் நலனில் அக்கறை காட்டுவது அனைவரின் கடமையாகும். மேலும் இந்த ஆண்டும் கொடிநாள் நிதியை புதுச்சேரி மக்கள் முன்வந்து தாராளமாக வழங்க வேண்டும் என்று முதல்வர் ரெங்கசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

புதுச்சேரி: ‘முப்பரிமாணங்கள்’ ஓவியக் கண்காட்சி தொடக்கம்

புதுச்சேரி செட்டி வீதியில், தனியார் உணவகத்தில் “முப்பரிமாணங்கள்” ஓவியக் கண்காட்சி தொடங்கியது. இந்நிகழ்வினை தொழிலதிபர் ராமச்சந்திரன், அடி சல்பே நிர்வாகி சுகன்யா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். மேலும் கலைமாமணிகள் ஓவியர் சுகுமாரன், கந்தப்பன் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வு டிச.6-27 வரை இலவசமாக பொதுமக்கள் பார்வைக்கும், விற்பனைக்கும் இருக்கும் என்று தனியார் உணவாக சார்பில் தெரிவித்தனர்.