News August 26, 2024

காரைக்கால் அருகே கஞ்சா விற்றவர் கைது

image

காரைக்கால் அடுத்த திருபட்டினம் காவல் நிலைய போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிழக்குப்புற வழிச்சாலையில் முகமது மீரான் சாஹிப் என்பவரை போலீசார் சோதனை செய்த போது 10 கிராம் வீதம் கஞ்சாவை சிறிய பொட்டலங்களாகக் கட்டி 300 கிராம் வைத்திருந்த கஞ்சாவை போலீசார் மீட்டு அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 25, 2025

புதுவை: மின் இணைப்பு துண்டிக்கப்படும் – எச்சரிக்கை

image

புதுவை மின்துறை நகர செயற்பொறியாளர் நேற்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், புதுவை மின்துறை நகர இயக்குதல் பராமரித்தல் கோட்டம், நகர்ப்புற மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு உட்பட்ட கடற்கரை சாலை, வம்பாகீரைப்பாளையம், திப்புராய்பேட், நெல்லித்தோப்பு, சாரம், பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்கள் தங்கள்மின் கட்டணத் தொகையை கடைசி தேதிக்குள் செலுத்தி மின் துண்டிப்பை தவிர்க்குமாறு தெரிவித்துள்ளார்.

News November 25, 2025

புதுச்சேரி: மீனவர்களுக்கு எச்சரிக்கை

image

புதுவை மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் நேற்று(நவ.24) செய்தி வெளியிட்டுள்ளார். அதில், சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி இன்று 25ந்தேதி முதல் கடலோரப்பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

News November 25, 2025

புதுவை: VOTER IDக்கு புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

புதுவை மக்களே, உங்க VOTER ID பழசாவும், உங்க போன்ல இருக்கிறது ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER IDஐ புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கு.
1. இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க.
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTER ID எண்ணை பதிவிடுங்க.
4. உங்க போனுக்கே VOTER ID வந்துடும்.
இத்தகவல் மற்றவர்களுக்கும் தெரிய SHARE பண்ணுங்க..

error: Content is protected !!