News December 26, 2024
காரைக்காலுக்கு ஜிப்மர் மருத்துவர்கள் வருகை
புதுவை ஜிப்மர் மருத்துவமனையிலிருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வரும் சனிக்கிழமை (28.12.2024) அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை புற்றுநோய் பிரச்சனைகளுக்கான மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கவுள்ளனர். இதில் காரைக்கால் வாழ் பொதுமக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் தங்களை கேட்டுக்கொள்கிறது.
Similar News
News December 28, 2024
கல்வித்துறையில் பணியாற்றும் பால சேவிகாக்கள் இடமாற்றம்
புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில், காரைக்காலில் செயல்படும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் பால சேவிகாக்கள் 7 பேர் புதுச்சேரி பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காரைக்கால் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஏழு பால சேவிகாக்காள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
News December 28, 2024
புதுவை சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் எச்சரிக்கை
புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆன்லைனில் தங்கும் விடுதிகளை தேடும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து, மோசடி கும்பல் ஓட்டல்களின் போலியான இணையதளத்தை உருவாக்கி பணத்தை பறிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர். எனவே, சுற்றுலா பயணிகள் ஆன்லைனில் அறைகளை முன்பதிவு செய்யும் முன் ஓட்டல் இணையதளத்தின் உண்மை தன்மையை கண்டறிந்து முன் பணம் செலுத்த வேண்டும் என புதுவை சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
News December 28, 2024
புதுச்சேரியில் நாளை ஆராய்ச்சி, தீயணைப்புத் துறை தோ்வுகள்
புதுவை அரசுப் பணியாளர் மற்றும் நிா்வாக சீா்த்திருத்தத் துறை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமார் ஜா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், புதுவை திட்டம் மற்றும் ஆராய்ச்சித் துறையில் ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நாளை ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரியில் 10 மையங்களில் நாளை நடைபெறவுள்ளது. தீயணைப்புத் துறையில் நிலைய அதிகாரி பணியிடத்துக்கான தேர்வு 2 மையங்களில் நடைபெற உள்ளது.