News March 26, 2025
காரைக்காலில் 2000 ஆண்டு பழமையான கோயில்!

காரைக்காலில் கைலாசநாதர் கோயில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். இங்குள்ள மூலவர் கைலாசநாதர், தாயார் செளந்தாராம்பாள் என்று அழைக்கப்படுகின்றனர். இந்த கோயில் அம்மையார் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ளது. இக்கோயில் 8 ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் புனரமைக்கப்பட்டு மீண்டும் பிரெஞ்ச் ஆட்சி காலத்திலும் புனரமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோயில் பற்றி உங்களுக்கு தெரிந்ததை கமெண்ட் செய்யவும்
Similar News
News November 28, 2025
புதுவை: தட்டிக்கேட்ட வாலிபருக்கு கத்தியால் வெட்டு

புதுவை வில்லியனுார் ராமநாதபுரம், புது தெரு விஜயசங்கர், நேற்று முன்தினம் அங்குள்ள பாலம் வழியாக பைக்கில் சென்றார். அதே பகுதி செந்தில் என்பவர் மாடுகளை சாலையில் ஓட்டிச் சென்றார். அப்போது மாடு இடித்து விஜயசங்கர் கீழே விழுந்தார். தட்டிக்கேட்ட விஜயசங்கரை செந்தில், கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News November 28, 2025
காரைக்கால்: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

‘டித்வா புயல்’ காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் மிக கன மற்றும் அதி தீவிர மழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே காரைக்காலில் உள்ள பொதுமக்கள் எச்சரிகையுடனும் பாதுகாப்புடனும் இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக புகார்களுக்கு இலவச எண்கள் 1070, 1077 ஆகியவற்றின் வழியாக தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.